Search This Blog
Hello Buddy's this is Sing song tamizha lyrics am uploading all tamil new and old song lyrics in our site all of you guys like music and songs and also you like a sing please visit our site you can read the song lyrics and go for sing and also comment which tamil song lyrics you want mention also that song name definitely am upload that song lyrics in our site
Featured
- Get link
- X
- Other Apps
பழைய குரல் கேட்கிறதே பாடல் வரிகள் தமிழில்
Movie Iyarkai
Music Vidyasagar
Song Pazhaya kurala
Singer Sujatha
பழைய குரல் கேட்கிறதே யாரோ யாரோ
புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ
எதனோடு என் நெஞ்சம் செவி சாய்க்குமோ
இரண்டோடும் சேராமல் உயிர்மைக்குமோ
யாரோ யாரோ
பழைய குரல் கேட்கிறதே யாரோ யாரோ
புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ
Music & Charanam 1
பகலில் சூரியன் இரவில் நிலவு
இரண்டும் பிழையா இரண்டும் சரியா
இயற்கையின் தீர்ப்பு சொல்லுமா
எந்தக் கண்ணால் உலகம் பார்ப்பேன் நொந்து இளைத்தேன் நூலாக
இரட்டைப் பிள்ளையில் எதன் மேல் நேசம் என்று மயங்கும் தாயாக
துடிக்கும் துடிக்கும் மனது தடுக்கும் தடுக்கும் மரபு
எனது வானத்தில் என்னவோ ஏதோ இரண்டு திங்கள் ஆகிறது
பழைய குரல் கேட்கிறதே யாரோ யாரோ
புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ
Music & Charanam 2
கடலில் ஒருவன் கரையில் ஒருவன் அவனோ உயிரில் இவனோ மனதில்
இரண்டில் எதுதான் வெல்லுமோ
சொல்லி முடிக்கும் துயரம் என்றால் சொல்லி இருப்பேன் நானாக
உள்ளுக்குள்ளே மோடி மறைத்தேன் ஊமை கண்ட கனவாக
துடிக்கும் துடிக்கும் மனது தடுக்கும் தடுக்கும் மரபு
எனது வானத்தில் என்னவோ ஏதோ இரண்டு திங்கள் ஆகிறது
பழைய குரல் கேட்கிறதே யாரோ யாரோ
புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ
எதனோடு என் நெஞ்சம் செவி சாய்க்குமோ
இரண்டோடும் சேராமல் உயிர்மைக்குமோ
யாரோ யாரோ.
Popular Posts
Naa ready dha varava (Leo) song lyrics
- Get link
- X
- Other Apps
Vizhigalin aruginil vaanam song lyrics
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment