Search This Blog
Hello Buddy's this is Sing song tamizha lyrics am uploading all tamil new and old song lyrics in our site all of you guys like music and songs and also you like a sing please visit our site you can read the song lyrics and go for sing and also comment which tamil song lyrics you want mention also that song name definitely am upload that song lyrics in our site
Featured
- Get link
- X
- Other Apps
ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம் பாடல் வரிகள் தமிழில்
Movie Kaasi
Music Ilayaraja
Song Aathorathile aalamaram
Singer Hariharan
ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்
ஆலமரத்தில் தூலிகட்டி ஆடவரும் ஸ்வர்ணகுயிலே
ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்
ஆலமரத்தில் தூலிகட்டி ஆடவரும் ஸ்வர்ணகுயிலே
ஆடும் நெஞ்சில் ஆடும் சின்ன கண்ணம்மா கண்ணம்மா
ஆடி வெள்ளம் போல பொங்கி பாடலாமா
கூடு கட்டி நெஞ்சில் வாழும் பொன்னமா பொன்னம்மா
கொஞ்சி கொஞ்சி கொஞ்சம் வந்து பேசலாமா
உன்னைத்தானே பாட்டில் வச்சேன் நெஞ்சிக்குள்ள பூட்டிவச்சேன்
ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்
ஆலமரத்தில் தூலிகட்டி ஆடவரும் ஸ்வர்ணகுயிலே
Music & Charanam 1
வெள்ளி கொலுசு ரெண்டு துள்ளி குலுங்க உந்தன் காலடியின் ஓசமட்டும் கேட்கும்
நெஞ்சில் வரஞ்சிவெச்ச உந்தன் அழகை கண்ணில் பார்திருக்க ஆசையெல்லாம் தீரும்
வானின் வடிவம் என்ன மண்ணின் வனப்பும் என்ன நீ கொடுத்த கண்ணை கொண்டு பார்ப்பேன்
காடு மாலைகள் எங்கும் ஓடி குதிச்சு வந்து ஓய்வெடுக்க உன் மடியை கேட்பேன்
என் வானிலே நான் பார்க்கும் பொன்வசந்த காலம்
நீதானம்மா நான் பாடும் என்னுயிரின் ராகம்
கண்மணியின் பாவையென கண்ணுக்குள்ளே வந்தவளே
உன்னைத்தானே பாட்டில் வச்சேன் நெஞ்சிக்குள்ள பூட்டிவச்சேன்
ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்
ஆலமரத்தில் தூலிகட்டி ஆடவரும் ஸ்வர்ணகுயிலே
ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்
ஆலமரத்தில் தூலிகட்டி ஆடவரும் ஸ்வர்ணகுயிலே
Music & Charanam 2
கண்கள் இரண்டு அதில் ஒன்ன எனக்கு தந்த உன்கடனை எப்படி நான் தீர்ப்பேன்
ரெண்டு குரல் இருந்தா ஒன்ன உனக்கு தந்து நானும் உன்னை பாடச்சொல்லி கேட்பேன்
வெள்ளி நிலவில் கூட உள்ள கலங்கம் பத்தி ஊரு சொல்ல கேட்டதுண்டு மானே
கள்ளம் கபடமேதும் இல்லா குழந்தையென துள்ளி வந்த கொல்லிமலை தேனே
நேற்றுவரைக்கும் நான் பார்த்த கற்பனைகள் யாவும்
உண்மையனவே நான் காண கண்ணில் வந்த ஒளியே
கண்மணியின் பாவையென கண்ணுக்குள்ளே வந்தவளே
உன்னைத்தானே பாட்டில் வச்சேன் நெஞ்சிக்குள்ள பூட்டிவச்சேன்
ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்
ஆலமரத்தில் தூலிகட்டி ஆடவரும் ஸ்வர்ணகுயிலே
ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்
ஆலமரத்தில் தூலிகட்டி ஆடவரும் ஸ்வர்ணகுயிலே
ஆடும் நெஞ்சில் ஆடும் சின்ன கண்ணம்மா கண்ணம்மா
ஆடி வெள்ளம் போல பொங்கி பாடலாமா
கூடு கட்டி நெஞ்சில் வாழும் பொன்னமா பொன்னம்மா
கொஞ்சி கொஞ்சி கொஞ்சம் வந்து பேசலாமா
உன்னைத்தானே பாட்டில் வச்சேன் நெஞ்சிக்குள்ள பூட்டிவச்சேன்
ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்
ஆலமரத்தில் தூலிகட்டி ஆடவரும் ஸ்வர்ணகுயிலே.
Popular Posts
Naa ready dha varava (Leo) song lyrics
- Get link
- X
- Other Apps
Vizhigalin aruginil vaanam song lyrics
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment